செய்திகள்

பிரான்ஸ் புறப்பட்ட தாயும் மகளும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது

பிரான்ஸ் குடியுரிமை பெற்ற பெண் ஒருவரும் அவரது மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என விமானநிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இவ்விருவரும் நேற்று திங்கட்கிழமை பிரானடஸ புறப்பட்ட போதே கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மகளும் தாயும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டிலிருந்து அண்மையில் விடுமுறையில் இலங்கை வந்த தாயும் மகளும் நேற்று காலை பிரான்ஸ் திரும்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையம் சென்றிருந்தனர்.

அங்கு வைத்தே அவ்விருவரும் கைதானதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கைதான பெண் பகீரதி எனவும் மகள் பகல்வி(8 வயது) எனவும் தெரிவிக்கப்படுகின்றது.