செய்திகள்

பிரான்ஸ் புலனாய்வு துறைமீது குற்றச்சாட்டு

பிரான்சில் இந்த வாரம் முழுவதும் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு அந்த நாட்டின் புலனாய்வு துறை பொறுப்பேற்க வேண்டும் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் குறித்து பிரான்ஸ் அதிகாரிகளுக்கு மாத்திரமல்ல ஐரோப்பியமற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கும் தெரிந்துள்ள நிலையில் பிரான்ஸ் புலனாய்வு பிரிவினர் இவர்களை கண்காணிக்காமலிருந்தனரா என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
முக்கிய சூத்திரதாரிகளில் ஓருவர் மூன்று வருடகாலம் யேமனில் இருந்திருக்கின்றார், மற்றையநபர் ஈராக்கிற்கு பயங்கரவாதிகளை அனுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு பிடிபட்டுள்ளார்,இது தவிர அவர்கள் ஐரோப்பாவிலுள்ள ஏனைய அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளனர், இவ்வாறான நிலையிலும் பிரான்ஸ் புலனாய்வு துறை அலட்சியமாக இருந்ததா என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.