செய்திகள்

பிராவோவின் அபார பந்து வீச்சில் பெங்களூரை வீழ்த்தியது சென்னை

015 ஐ.பி.எல்.இன் இன்றைய 37-வது போட்டியில் சென்னை- பெங்களூர் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற தோனி துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை 148 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
149 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணியின் மாடின்சன் கோலி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் 3-வது ஓவரை ஈஸ்வர் பாண்டே வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் மேடின்சன் ஆட்டமிழந்தார்.அடுத்து களம் இறங்கிய டி வில்லியர்ஸ் 14 பந்தில் 5 பவுண்டரியுடன் 21 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
3-வது விக்கெட்டுக்கு கோலி உடன் மந்தீப் சிங் ஜோடி சேர்ந்தார். 6-வது ஓவரை மோசித் சர்மா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை விராட் கோலி மிட்விக்கெட் திசையில் அடித்து விட்டு வேகமாக ஓடி வந்தார். மறுமுனையில் இருந்தது மந்தீப் சிங் கிரீசை தொடுவதற்குள் தோனி அற்புதமாக ஸ்டம்பிங் செய்தார். இதனால் பெங்களூர் அணி 5.2 ஓவரில் 34 ஓட்டங்களை எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
4-வது விக்கெட்டுக்கு கோலியுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். பெங்களூர் அணி 7.2 ஓவரில் 50. ஓட்டங்களை பெற்றது.கோலி- தினேஷ் கார்த்திக் ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 11-வது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தை ஜடேஜாவிற்கு நேராக கோலி அடித்தார். ஆனால் ஜடேஜா அதை பிடிக்கத் தவறினார். இதனால் கோலி 25 ரன்னில் அவுட்டாவதில் இருந்து தப்பினார்.
12-வது ஓவரின் முதல் பந்தில் கோலி ஆறு ஓட்டங்களை பெற்றார். 14-வது ஓவரை பிராவோ வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் கோலி ரன் அவுட் ஆனார். அவரை பிராவோ அருமையாக ரன் அவுட் செய்தார். இந்த ரன் அவுட்டுதான் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.
அடுத்த ஓவரை நெக்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் தினேஷ் கார்த்திக் அவுட் ஆனார். அப்போது பெங்களூர் அணி 15 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 100 ஓட்டங்களை எடுத்திருந்தது.
கடைசி 5 ஓவரில் 49 ஓட்டங்கள் தேவைப்பட்டன. 16-வது ஓவரை பிராவோ வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் பெங்களூர் அணி 9 ஓட்டங்களை எடுத்தது. 17-வது ஓவரை நெக்ரா வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் சர்பராஷ் கான் ஆட்டமிழந்தார்.அடுத்து பட்டேல் களம் இறங்கினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் பட்டேல் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.இந்த ஒவரில் வைடுடன் 3 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார் நெக்ரா..
கடைசி ஓவரை பிராவோ வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் வைஸ் ஆட்டமிழந்தார். 4-வது பந்தில் அப்துல்லா ஆட்டமிழக்க பெங்களூர் அணி 19.4 ஓவரில் 124 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது. சென்னை அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

.