செய்திகள்

பிரிட்டனின் குட்டி இளவரசியின் பெயர் ஷார்லெட்

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்-கேட் தம்பதியருக்கு பிறந்த பெண் குழந்தைக்கு இளவரசி ஷார்லெட் எனப் பெயர் சூட்டபட்டுள்ளது.

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்-கேட் தம்பதியருக்கு பிறந்த பெண் குழந்தைக்கு இளவரசி ஷார்லெட் எனப் பெயர் சூட்டபட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை பிறந்த புதிய இளவரசிக்கு ஷார்லெட் எலிசபெத் டயானா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றும், அவர் மாட்சிமை தங்கிய கேம்பிரிட்ஜ் இளவரசி ஷார்லெட் என அழைக்கப்படுவார் என்றும் கென்ஸிங்க்டன் அரண்மனை தெரிவித்துள்ளது.

புதிய இளவரசி ஷார்லெட், பிரிட்டிஷ் அரச பட்டத்துக்குரிய வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளார்.

கடந்த சனிக்கிழமை புதிய இளவரசியின் பிறப்பு லண்டன் முழுவதும் இராணுவ மரியாதையுடன் வரவேற்கப்பட்டது.