செய்திகள்

பிரிட்டனின் வான்வெளிக்கு அருகில் தென்பட்ட ரஸ்ய விமானங்களால் பதட்டம்

பிரிட்டனின் வான்வெளிக்கு அருகில் பயணம் செய்து கொண்டிருந்த இரு ரஸ்ய விமானங்களை பிரிட்டனின் விமானங்கள் இடைமறித்து திருப்பியனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோர்ன்வோல் நகரத்திற்கு அருகில் ரஸ்சியாவின் இரு விமானங்களை பிரிட்னின் டைப+ன் ஜெட் விமானங்கள் இடைமறித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய இராச்சியத்தின் இரு விமானங்கள் ரஸ்சியா விமானங்களை அழைத்துசென்றன,ரஸ்ய விமானங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் பிரிட்டனின் இறைமையுள்ள பகுதிக்குள் நுழையவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட ரஸ்ய விமானங்கள் எந்த வகையை சேர்ந்தவை என்பதையும் பிரிட்டனின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
2014 இல் நேட்டோ நாடுகளின் எல்லைக்கு அருகில் 400 தடவைக்கு மேல் ரஸ்ய விமானங்கள் வந்துள்ளதாக அந்த அமைப்பு சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் பல தடவைகள் ரஸ்சிய விமானங்கள் பிரிட்டனின் எல்லைக்கு வெளியே தென்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ரஸ்சியா தனது பலத்தை காண்பிப்பதற்காவும், அரசியல் செய்தியொன்றை தெரிவிப்பதற்காகவுமே இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உக்ரைன் நெருக்கடிக்கு ரஸ்சியாவே முக்கிய காரணம் என பிரிட்டன் குற்றம்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.