செய்திகள்

பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார்

பிரிட்டனின் வெளிவிவகார அலுவலக அமைச்சர் ஹியுகோ சுவையர் நானை புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என இலங்கைக்ககானபிரிட்டிஷ் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான மூன்று நாள் விஜயத்தின் போது அவர் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க உட்பட முக்கிய அமைச்சர்களை சந்தித்து சீர்திருத்த நடவடிக்கைகள், மற்றும் ஓத்துழைப்புகள் குறித்து ஆராயவுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் உடனடியாக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள மை குறித்து தான் மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர்,ஜனநாயக மற்றும் பொறுப்புகூறும் இலங்கையை நோக்கி புதிய அரசாங்கம் மேற்கொண்டுள்ள ஆரம்பகட்ட நடவடிக்கைகளை வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த கால ஸ்திரமின்மைக்கு பின்னர் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய புதிய விருப்பங்களை காண்பது மகிழ்ச்சியளிக்கின்றது , பிரிட்டன் அதற்கு ஓத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது விஜயத்தின் போது யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு வடமாகாண முதலமைச்சரை சந்திக்கவுள்ளதுடன், சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளை சந்தித்து மனிதஉரிமை நிலவரம் குறித்தும் ஆராய்வார்.