செய்திகள்

பிரிட்டனை சேர்ந்த ஐஎஸ் உறுப்பினர் அடையாளம் காணப்பட்டார்

மேற்குலக பணயக்கைதிகளை படுகொலை செய்யும் வீடியோக்களில் காணப்பட்ட பிரிட்டனை சேர்ந்த ஐஎஸ் உறுப்பினர் அடையாளம் காணப்பட்டுள்ளார்
ஐஎஸ் அமைப்பின் படுகொலை வீடியோக்களில் காணப்பட்ட முகமூடியணிந்த ஜிகாதி ஜோன் என அழைக்கப்படும் நபர் மேற்கு லண்டணைசேர்ந்த 20 வயது முகமட் எம்வசி என அடையாளம் காணப்பட்டுள்ளார். பிரிட்டனின் பாதுகாப்பு பிரிவினரே இந்த விபரத்தை வெளியிட்டுள்ளனர். சில நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு முன்னர் அவரது விபரங்களை அவர்கள் வெளியிடவில்லை என தெரியவருகின்றது.
அமெரிக்க ஊடகவியலாளர் ஜேம்ஸ் பொலி கொல்லப்படும் வீடியோவிலேயே அவர் முதலில் தோன்றினார்.
இதன் பின்னர் அவர் அமெரிக்க பத்திரிகையாளர்,பிரிட்னின் மனிதாபிமான பணியாளர்,உட்பட பல மேற்கு நாட்டவர்கள் கொல்லப்படும் வீடியோவில் தோன்றியுள்ளார்.
அனைத்து வீடீயோக்களிலும் அவர் தனது முகத்தை மறைத்தபடியே தோன்றுவது வழமை.மேலும் இவர் பணயக்கைதிகளை கொலைசெய்வதற்கு முன்னர் மேற்கு லகை கடுமையாக சாடுவது வழமை.
ஜப்பானிய ஊடகவியலாளர் கொல்லப்படும் வீடியோவிலும் சமீபத்தில் அவர் காணப்பட்டிருந்தார்.
சிரியாவில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ள மேற்குலகத்தவர்களை தடுத்துவைத்திருக்கும் மூன்று பிரிட்டிஸ் பிரஜைகளில் இவரும் ஓருவர் என தெரிவிக்கப்படுகின்றது.