செய்திகள்

பிரிட்டனை சேர்ந்த 9 மருத்துவமாணவர்கள் சிரியாவிற்குள் நுழைந்துள்ளனர்.

பிரிட்டனை சேர்ந்த ஓன்பது மருத்துவமாணவர்களும், மருத்துவர்களும் சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் சேவையாற்றுவதற்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

இவர்கள் அனேகமாக 20 வயதிற்குட்பட்வர்கள் எனவும் சூடானில் கல்விபயின்று வந்ததாகவும் ஓரு வார காலத்திற்கு முன்னர் இவர்கள் சிரியாவிற்குள் நுழைந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்களில் சிலர் தாங்கள் குறிப்பிட்ட பகுதியில் சுயவிருப்பத்தின் பேரில் மனிதாபிமான பணியில் ஈடுபட்டுள்ளதாக பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

نساء اوكرانيات بصفوف "داعش" في الموصلசிரியாவிற்குள் இவர்கள் சென்றதை அறிந்ததும்,இவர்கள் குறித்த மேலதிக விபரங்களை அறிந்துகொள்வதற்காக சிலரின் பெற்றோர் துருக்கிக்கு சென்றுள்ளனர்.தங்களுக்கு பிரிட்டிஸ் மற்றும் துருக்கி அரசாங்கங்கள் உரிய உதவிகளை வழங்கவில்லை என்றும் குற்றச்சாட்டு சுமத்தியுள்ள பெற்றோர்,ஓன்பது பேர் தனது எல்லையை கடப்பதை துருக்கி வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்ததா எனகேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த ஓன்பது பேருடன் சூடானை சேர்ந்த இரு மருத்துவர்களும் சென்றுள்ளதாகவும், அவர்கள் அமெரிக்க மற்றும் கனடா வம்சாவளியினர் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் சேவையாற்றும் நோக்கத்துடனேயே அங்கு சென்றுள்ளனர் ஆயுதமேந்துவதற்காக இல்லை என அவர்களது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அவர்கள் மீண்டும் திரும்பிரிட்டனிற்கு வந்தால்,அவர்கள் ஆயுதமேந்தாத பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் பிறந்த இவர்கள் இஸ்லாமிய கலாச்சாரம் குறித்து அறிந்துகொள்வதற்காக சூடானிற்கு சென்றதாகவும்,எனினும் கடந்த இருவருடங்களாக அவர்கள் தீவிர இஸ்லாமிய உணர்வுகொண்டவர்களாக மாறிவந்ததாகவும் அவர்களது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.