செய்திகள்

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது: கேமரூன் மீண்டும் வெல்வாரா?

இங்கிலாந்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்களிப்புகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் மக்கள் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர். பல முக்கிய அரசியற் தலைவர்களும் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
இன்று ஆரம்பமாகியுள்ள வாக்களிப்பில் 5 கோடி பேர் வாக்களிக்கின்றனர். அதற்காக 50 ஆயிரம் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்தலில் ஆளும் கூட்டணி அரசின் பெரிய கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கும் பிரதான எதிர்க்கட்சியான தொழில் கட்சிக்கும் இடையே தான் முக்கிய போட்டி நிலவுகிறது.
கன்சர்வேடிவ் கட்சி தலைவரும் பிரதமருமான டேவிட் கேமரூன் தொழிலாளர் கட்சி தலைவர் எட் மிலிபாண்ட் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று வாக்களிப்பு காலை 7 மணிக்கு தொடங்கியது.
வாக்கு சாவடிகளுக்கு சென்ற பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இந்த தடவை ஓன்லைனில் வாக்களிக்கும் புதிய முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவை தவிர ஏற்கனவே தபால் மூல வாக்களிப்பும் இடம்பெற்றுள்ளது.

 

_82829166_milibands
இந்த முறை தேர்தல் களமே முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. கடந்த 2010 தேர்தலில் இந்த இரு கட்சிகளுக்கும் தனி பெரும்பான்மை கிடைக்க வில்லை. எனவே லிபரல் ஜனநாயக என்ற கட்சியுடன் கன்சர்வேடிவ் கட்சி கூட்டணி ஆட்சி அமைத்தது. டேவிட் கேமரூன் பிரதமரானார்.
ஆனால் இந்த தடவை இந்த 2 கட்சிகளுக்கும் இடையே கூட்டணி இல்லை. இந்த நிலையில் இந்த தேர்தலிலும் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காது என வாக்காளர்களிடம் நடத்திய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
மக்கள் ஆதரவை பொறுத்த வரை கன்சர்வேடிவ் மற்றும் தொழில கட்சிகளுக்கு இடையே பெரிய வித்தியாச மில்லை. ஒரு சதவீதம் மட்டுமே வித்தியாசம் உள்ளது. ஸ்காட்லாந்து சுதந்திரம் பிரச்சினையும் இந்த தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது. எனவே டேவிட் கேமரூன் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆவாரா? என்பது பெரும் கேள்வியாக காணப்படுகின்றது.