செய்திகள்

பிரித்தானியாவைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் தொண்டு நிறுவனம் கிளிநொச்சியில் மக்களுக்கு நிவாரணப் பணி

பிரித்தானியாவைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் ‘எதிர்காலத்துக்கான பாதை’ எனும் தமிழ் தொண்டு நிறுவனம் வறிய மக்களுக்கான நிவாரணப் பணியை முன்னெடுத்துள்ளது.கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கிளிநொச்சியிலும் ஊரடங்கு அமுலில் உள்ளதால் நாளாந்த கூலி வேலை செய்யும் குடும்பங்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வறுமை நிலையைப் போக்கும் வகையில் குறித்த நிறுவனத்தால் நிவாரணப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதன் முதற்கட்டமாக, சுமார் ஐந்து இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான அத்தியவசிய உணவுப் பொருட்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் தெரிவுசெய்யப்பட்ட 300 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தர்மபுரம், ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலய தர்மகர்த்தா ஊடாக நேற்று இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன் இன்றும் சுமார் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதி கொண்ட உலருணவுப் பொருட்கள், மேலும் 300 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக ஆஞ்சநேயர் ஆலய தர்மகர்த்தா கருத்துத் தெரிவிக்கையில், “எதிர்காலத்துக்கான பாதை எனும் பிரித்தானிய தமிழ் தொண்டு நிறுவனத்தினரால் தொடர்ந்தும் மக்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன.பிரித்தானியாவைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் குறித்த அமைப்பு தாயகத்தில் வாழ்வாதார செயற்திட்டங்கள், மாணவர்களுக்கான கற்றல் ஊக்குவிப்பு, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை தரமுயர்த்துதல் போன்ற சேவைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.(15)எதிர்காலத்துக்கான-பாதை-அமைப்பு-கிளிநொச்சி-மக்கள்-நிவாரண-உதவி-1 எதிர்காலத்துக்கான-பாதை-அமைப்பு-கிளிநொச்சி-மக்கள்-நிவாரண-உதவி-2