செய்திகள்

பிரித்தானியா சென்றார் சந்திரிகா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பிரித்தானியாவுக்குச் சென்றிருப்பதாக கொழும்பில் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டே அவர் பிரித்தானியா சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனாலேயே நேற்று நடைபெற்ற ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.