செய்திகள்

பிரித்தானிய தேர்தல் : உமா குமரன் தோல்வி; இலங்கையரான ரணில் வெற்றி

பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கைத் தமிழரான உமா குமரன் வெற்றி பெற தவறியுள்ளார். இவரது தொகுதியில் ( ஹரோ ஈஸ்ட் ) கொன்சர்வேட்டிவ் வேட்பாளர் பொப் பிளக்மன் 24,668 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். உமா குமரன் 19,911 வாக்குகளை பெற்றார்.

Ranilஇதேசமயம், ஹம்ப்செயர் வட கிழக்குத் தொகுதியில் கான்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கையரான ரணில் ஜெயவர்த்தன 35,573 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுளார். இவர், இத் தொகுதியில் 30 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்துவந்த ஜேம்ஸ் அர்பொட்னொட்டை தோற்கடித்துளார்.

இத் தேர்தலில் போட்டியிட்ட மற்றொரு தமிழரான சொக்கலிங்கம் யோகலிங்கம் வெறும் 166 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளார்.