செய்திகள்

பிரித்தானிய பராளுமன்ற தேர்தல்: வெல்லப்போவது யார் ? (படங்கள்)

பிரித்தானியாவில் பாராளுமன்றத்துக்கான தேர்தல் இன்று வியாழக்கிழமை நடைபெறும் நிலையில் வாக்களிபுக்கு முன்னர் இறுதியாக நடத்தப்பட்ட கருத்து கணிப்புக்களின் படி எந்த ஒரு கட்சியும் தனித்து ஆட்சி அமைக்கும் நிலைமை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு பிரதான கட்சிகளான பழமைவாத (கன்சர்வேட்டிவ்) மற்றும் தொழில் கட்சி (லேபர்) ஆகியவற்றுக்கிடையில் கடும் போட்டி நிலவி வருவதகவும், அதேசமயம் ஏனைய கட்சிகளும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளதாகவும், இதனால், சிறு கட்சி ஒன்றுடன் சேர்ந்து பழமைவாத அல்லது தொழில் கட்சி ஆட்சி அமைக்க வேண்டிய நிலைமையே அனேகமாக ஏற்ப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு பிரதான கட்சிகளும் தலா 33 சதவீத வாக்குகளையும், தாராள ஜனநாயக கட்சி 10 சதவீத வாக்குகளையும், பிரித்தானிய சுதந்திர கட்சி 11சதவீத வாக்குகளையும், பச்சை கட்சி 6 சதவீத வாக்குகளையும் பெறும் என்று கருத்துகணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

cameron

பழமைவாத கட்சி தலைவரும் தற்போதைய பிரதமருமான கமரூன் தனது மனைவி சமந்தாவுடன்

milibands

தொழில் கட்சி தலைவர் எட் மில்பான்ட் தனது மனைவி ஜஸ்ரினுடன்

clegg1

தாராள ஜனநாயக கட்சி தலைவர் நிக் கிலெக் தனது மனைவி மிரியத்துடன்

farage

சுதந்திர கட்சி தலைவர் நிகெல் பிராக்

leanne

பிளைட் சிம்ரு கட்சி தலைவர் லியனே

nataliebennett

பச்சை கட்சி தலைவர் நட்டாலி பென்னெட்

sturgeonpa

எஸ். என். பி தலைவர் நிகோலா ஸ்டோர்ஜியோன் தந்து கணவர் பீற்றர் முரெலுடன்