செய்திகள்

பிரித்தானிய பிரதமர் விரைவாக குணமடைய எனது வாழ்த்துக்கள் – ஜனாதிபதி

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் விரைவில் மீண்டுவர பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இது குறித்து டுவிட்டரில் பதிவில் கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி, “பொரிஸ் ஜோன்சன் விரைவாக குணமடைய எனது வாழ்த்துக்கள். இந்த நெருக்கடியான காலத்திலும் உங்களுக்கும் பிரித்தானிய மக்களுக்குமான எங்கள் பிரார்த்தனை தொடரும்” என பதிவிட்டுள்ளார்.

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கும் கொரோனா வைரஸ் பரவியிருந்தமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர், தன்னைத்தானே 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொண்டார்.ஆனால், வைரஸ் தொற்றின் தாக்கம் குறையாததால் அவர் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதமரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் தற்போது அவரது உடல் நிலை மோசமடைந்து வருகிறது. இந் நிலையில் தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனையடுத்து உலகத் தலைவர்கள் அனைவரும் பிரித்தானியப் பிரதமர் மீண்டு வர வேண்டும் என்று தங்களது ஆறுதலை வெளியிட்டிருந்தனர்.அதேபோன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் தனது டுவிட்டரில் கருத்துப் பதிவு செய்துள்ளார். அதில், “பொரிஸ் ஜோன்சன் விரைவாக குணமடைய எனது வாழ்த்துக்கள் எனவும் இந்த நெருக்கடியான காலத்திலும் உங்களுக்கும் பிரித்தானிய மக்களுக்குமான எங்கள் பிரார்த்தனை தொடரும்” என பதிவிட்டுள்ளார்.(15)