செய்திகள்

பிரித்தானிய புதிய தூதுவர் சம்பந்தனுடன் பேச்சு

இலங்கைக்கான பிரித்தானியாவின் புதிய தூதுவராகப் பொறுப்பேற்றுள்ள ஜேம்ஸ் டௌரிஸ் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரித்தானியத் தூதுவர் ஜேம்ஸ் டௌரிஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகள் மற்றும் அபிலாசைகள் குறித்து பேச்சு நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் பிரித்தானியாவின் புதிய தூதுவராகப் பொறுப்பேற்ற ஜேம்ஸ் டௌரிஸ், முன்னதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் பௌத்த பீடாதிபதிகள் உள்ளிட்டோரை சந்தித்திருந்தார்.