செய்திகள்

பிரித்தானிய பொலிசாரினால் இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் நான்கு பேர் கைது

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடித்திரிந்த நால்வர் பிரித்தானியப் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக பிரித்தானியாவுக்கு ஈராக் மற்றும் சிரியாவிலுள்ள இஸ்லாமிய தீவிரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்து வரும் நிலையில் உலக நாடுகளிலிருந்து பல இளைஞர்கள் தீவிரவாத அமைப்புடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர் என்ற கருத்துநிலையின் அடிப்படையில் பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றது. High Wycombe பகுதியில் இடம்பெற்ற இந்த திடீர் சோதனை நடவடிக்கையிலேயே 19,22,25 மற்றும் 27 வயதுடைய இளைஞர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். இதேவேளை, லண்டன் வீதியில் ஆயுதமேந்திய ஒருவரையும் தாம் கைது செய்துள்ளதாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.