செய்திகள்

பிரித்தாள எண்ணும் அரசியல்வாதிகளுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்:பிரசன்னா இந்திரகுமார்

கடந்தகாலங்களில் ஒருசில அரசியல்வாதிகளால் நடாத்தப்பட்ட பிரிவினைவாதங்களால் எமது சமுகங்களுக்கிடையில் ஒற்றுமை இல்லாதநிலை உருவாகியிருக்கின்றது. எதிர்வரும் காலங்களில் சமூகங்களை பிரித்தாள எண்ணும் அரசியல்வாதிகளுக்கு எமதுமக்கள் பாடம் புகட்டவேண்டும் என கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

கல்முனை உவெஸ்லி உயர்தரபாடசாலையின் பழையமாணவரும் கிழக்குமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கிழக்குமாகாணப் பணிப்பாளராகவும் பதவிஉயர்வு பெற்றுள்ள கல்முனை உவெஸ்லியன் வைத்தியகலாநிதி எம்.ஏ.எம். பாஸி அவர்களை கல்முனை உவெஸ்லியன் 78/82 பழையமாணவர்கள் அமைப்பினர் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று திருகோணமலை சர்வோதயம் மண்டபத்தில் அமைப்பின் தலைவரும் சர்வோதயத்தின் மாகாணங்களுக்கான இணைப்பாளருமாகிய ஜீவராஜ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்குமாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், உபதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்குமாகாணசபை உறுப்பினர்களான மா.நடராசா, ஞா.கிருஸ்ணபிள்ளை, இராஜேஸ்வரன் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டதுடன் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் 78/82 பழையமாணவர் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

எம்மவர்கள் கடந்தகாலங்களில் சமுகஒற்றுமை என்றவிடயத்தை மறந்துவிட்டார்கள். எனவே சமூகஒற்றுமை என்றவிடயத்தினை நாம் வெளிப்படுத்தவேண்டும். கடந்தகாலங்களில் ஒருசில அரசியல்வாதிகளால் நடாத்தப்பட்ட பிரிவினைவாதங்களால் எமதுசமுகங்களுக்கிடையில் ஒற்றுமை இல்லாதநிலை உருவாகியிருக்கின்றது. எதிர்வரும் காலங்களில் சமூகங்களை பிரித்தாள எண்ணும் அரசியல்வாதிகளுக்கு எமதுமக்கள் பாடம் புகட்டவேண்டும்.

எமதுதந்தைசெல்வாஒருவரையும் வேறுவேறாகபிரிக்கவில்லைஅவர் அனைவரையும் தமிழ் பேசும் மக்கள் என்றரீதியிலேயேஎண்ணினார். தற்போதுஅவ்வாறு இரு சமுகங்களும் ஒருமித்துசெயற்படும் நிலைஒருவாறுதோன்றியிருக்கின்றது. இந்நிலையில் எதிர்காலத்தில் இந்தகிழக்குமாகாணத்தில் தமிழ் முஸ்லீம் அரசியல்வாதிகள் ஒற்றுமையாக இருந்துஎமதுசமுகங்களைகட்டியெழுப்புதல் வேண்டும்.

கடந்தகாலத்தில் எமதுபோராட்டம் காரணமாகநாமும் எமதுசமுகமும் கல்வியில் பின்தங்கியநிலைக்குசென்றுள்ளோம். உலகத்தில் எழுத்தறிவுவீதம் அதிகமாகஉள்ளநாடு இலங்கைஆனால் நாமோஅதில் மிகவும் பின்னடைவில் இருக்கின்றோம். அந்தநிலையைமாற்றுவதற்குநாம் பலவாறுமுயற்சிகள் மேற்கொண்டுவருகின்றோம்.

தற்போதுதொழில்நுட்பக் கல்விஅதிகரித்துவரும் நிலையில் இந்ததொழில்நுட்பத்தில் நண்மைகளும் உண்டுதீமைகளும் உண்டுஅவற்றைபெற்றோர்கள் தான் புரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் பிள்ளைகள் மீதுஅக்கறையுடன் இருந்துகல்வியறிவினைப் புகட்டவேண்டும்.

எனவேஎதிர்வரும் காலங்களில் நாம் எமதுசமுகத்தின் கல்விநிலையில் மாற்றத்தினைஏற்படுத்துவதோடுசமுகங்களுக்கிடையிலானஒற்றுமைக்காகநாம் அனைவரும் ஒன்றிணைந்துபாடுபடவேண்டும் என்றுதெரிவித்தார்.

DSC01014