செய்திகள்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் செரினா வில்லியம்ஸ்

பிரான்சில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் செரினா வில்லியம்ஸ் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஒற்றையர் தர வரிசைப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள செரினா வில்லியம்ஸ், தர வரிசைப்பட்டியலில் 17வது இடத்தில் உள்ள சாரா எர்ரானியை எதிர்கொண்டார். இதில் 6-1, 6-3 என்ற என்ற நேர்செட்டில் செரினா வெற்றி பெற்றார்.