செய்திகள்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஷரபோவா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் மரிய ஷரபோவா தோல்வியடைந்து வெளியேறினார்.

ரஷ்யாவின் நட்சத்திர வீராங்கனை மரிய ஷரபோவாவுக்கு பிரெஞ்சு ஓபன் ஆடுகளம் நன்கு பரிச்சயமானது. வெற்றி பெற வாய்ப்புள்ள இந்த களத்தில் தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த அவர் இன்று மகளிர் ஒற்றையர் பிரிவு 4ம் சுற்றில் செக் குடியரசின் லூசி சபரோவாவை எதிர்கொண்டார்.
ஆனால் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய ஷபரோவாவின் சர்வீஸ்களை முறியடிக்க முடியாமல் ஷரபோவா தடுமாறினார். முதல் செட்டை போராடி இழந்த ஷரபோவாவின் முயற்சியை 2-வது செட்டிலும் ஷபரோவா தடுத்தார். இறுதியில் 6-7இ 4-6 என்ற செட்கணக்கில் ஷரபோவா தோல்வியடைந்து வெளியேறினார்.

இப்போட்டியில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறிய ஷரரோவா காலிறுதி ஆட்டத்தில் தன்னைவிட தரநிலையில் பின்தங்கியுள்ள முகுருசாவை (தரநிலை-21) சந்திக்க உள்ளார். இதேபோல் மற்றொரு காலிறுதியில் அனா இவானோவிக் ஸ்விட்டோலினா மோதுகின்றனர்.