பிரேக் இல்லாததால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய சாரதி
பண்டாரவளையிலிருந்து பதுளை நோக்கி கூரை தகடுகள் ஏற்றிச்சென்ற லொறி ஒன்று தெமோதரை பகுதியில் குறித்த லொறியில் பிரேக் இல்லாததால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் வாகன சாரதி வாகனத்தை செலுத்திய போதிலும் லொறியில் இருந்த பத்து இலட்சம் மதிக்கதக்க பெறுமதியான கூரை சீட்கள் வீதியில் கீழே விழுந்து உடைந்து சேதமாகியுள்ளதாக தெமோதரை பொலிஸார் தெரிவிக்கின்றனா்.
இச்சம்பவம் இன்று (24.04.2015) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வாகனத்திற்கும் வாகன சாரதிக்கும் எவ்வித பாதிப்பும் இல்லையென பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெமோதரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.