செய்திகள்

பிரேசில் நாட்டில் கடும் மழை! மண் சரிவில் சிக்கி 12 பேர் பலி

பிரேசிலின் சல்வேடார் நகரில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அதனால், மலைப்பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.

இதில், 12 பேர் மண்ணில் புதைந்து பலியாகினர். காணாமல் போன பலரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.