செய்திகள்

பிறந்தநாள் தினத்தன்று தற்கொலை செய்து கொண்ட மாணவி

அட்டன் மல்லியப்பு பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் 03.06.2015 அன்று பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர் தரத்தில் கல்வி பயின்று வந்த உதயகுமார் பிரவீனா (19 வயது) என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காதல் விவகாரத்தினாலேயே தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என அட்டன் பொலிஸார் சந்தேகப்படுகின்றனர்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்திலேயே குறித்த மாணவி அவருடைய அறையிலேயே தூக்கிட்டு கொண்டுள்ளார்.

வீட்டில் இருந்த தாய் தனது இரண்டாவது மகளை பாடசாலையிலிருந்து வீட்டிற்கு அழைத்து வர சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பாடசாலையில் சில பிரச்சினைகள் காரணமாக மேற்படி மாணவி தனது உயர் தர கல்வியை வீட்டியிலிருந்தவாரே கல்வி கற்றதாகவும் காதல் தொடர்பு இருப்பதாகவும் மாணவியின் தயார் தெரிவித்தார்.

எனினும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட உதயகுமார் பிரவீனாவுக்கு 03.06.2015 அன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடதக்கது.

பிறந்தநாள் தினத்தன்று இவ்வாறு தற்கொலை செய்து கொண்டது அவருடைய பெற்றோர்களும் பிரதேசவாசிகளும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

DSC09172 DSC09184

மரண விசாரணைகளை மேற்கொண்ட பின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.