செய்திகள்

பிறந்து ஏழு வாரங்களேயான பச்சிளங் குழந்தை கொரோனா தொற்றினால் உயிரிழப்பு

நுரையீரலில் ஏற்பட்ட நோய்நிலைமை காரணமாக வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பிறந்து ஏழு வாரங்களேயான பச்சிளங் குழந்தை பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்ததுடன், பின்னர் பொரளை சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.இதேவேளை, குறித்த குழந்தையின் தாய்க்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் பிறந்து ஏழு வாரங்களேயான பச்சிளங் குழந்தையொன்றுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொரளை சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவ நிபுணர் ஜி.விஜேசுந்தர தெரிவித்துள்ளார்.(15)