செய்திகள்

பிலிப்பைன்சில் கடல் சீற்றத்தில் சிக்கிய கப்பல்: 38 பேர் பலி, 15 பேர் மாயம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் 187 பேருடன் சென்ற கப்பல் கடல் சீற்றத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது. இதில் 38 பேர் பலியாகியுள்ளனர், 15 பேரின் நிலைமை என்ன என்று இன்னும் தெரியவில்லை.

பிலிப்பைன்சின் லெய்டே மாகாணத்தில் உள்ள ஆர்மோக் நகரிலிருந்து 173 பயணிகள் 14 ஊழியர்கள் உட்பட 187 பேருடன் சென்ற கப்பல் நேற்று காலை 9.30 மணிக்கு கமோட்டெஸ் தீவில் உள்ள பிலார் நகருக்கு கிளம்பியது. கிளம்பிய சிறிது நேரத்திலேயே கடல் சீற்றத்தில் சிக்கி நிலை குலைந்து கவிழ்ந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு பணியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் படகில் இருந்த 38 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர். படகில் இருந்த 15 பேரை காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.