செய்திகள்

பிலிப்பைன்ஸ் தொழிற்சாலையில் தீவிபத்து: 75 பேர் பலி

பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் உள்ள காலணிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 75 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மணிலாவின் புறநகர் பகுதியில் உள்ள பாதணிகள் தயாரிக்கும் தொழிற்சாலையிலேயே இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.இங்கு 100–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அங்குள்ள நுழைவு வாயில் அருகே வெல்டிங் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது அதில் இருந்து வெளியான தீப்பொறி அருகில் இருந்த ரசாயனத்தில் பட்டது. இதனால் ரசாயனம் தீப்பற்றியது. அது அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த ரப்பரிலும் பரவியது. இதனால் ஆலை முழுவதும் தீ பரவி எரிந்தது.
அதில் 100 ஊழியர்களும் சிக்கி கொண்டனர். 75 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். புலரை காணவில்லை. மற்றவர்கள் ரப்பர் எரிந்ததால் கடுமையான கரும்புகை ஏற்பட்டது. இதில் மூச்சு திணறியும் பலர் உயிரிழந்தனர்