செய்திகள்

பிளஸ் 2 தேர்வில் பாஸானார் லட்சுமி மேனன்

இந்திய அளவில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட மாணவர்களுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திங்கட்கிழமை வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் 72 சதவிதம் மதிப்பெண்கள் பெற்றுள்ள நடிகை லட்சுமி மேனன், பேஷன் டெக்னாலஜி படிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமி மேனன், கும்கி படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு, ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில், நடிகர் அஜித்தின் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

முன்னதாக தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானபோது, லட்சுமி மேனன் தேர்வில் தோல்வியடைந்துவிட்டதாக செய்தி வெளியாகி, பின்னர் அதனை அவர் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.