செய்திகள்

பிள்ளையை பாடசாலையில் சேர்க்க தாயிடம் பாலியல் லஞ்சம் கேட்ட அதிபர்

பிள்ளையொருவரை பாடசாலையில் சேர்ப்பதற்காக பிள்ளையின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கேட்ட  அதிபர் ஒருவர் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் முன்னிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஐராங்கனி பெரேரா முன்னிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிரதிவாதியான பாடசாலை அதிபர் மீதான தீர்ப்பு எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமது பிள்ளையை சேர்ப்பதற்காக கொட்டாவை பகுதியிலுள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றிற்கு சென்றிருந்தபோதுஇ தன்னுடன் ஹோட்டலுக்கு செல்வதற்கு விருப்பமாயின் பிள்ளையை பாடசாலையில் சேர்த்துக்கொள்ள முடியுமென தாயாரிடம் அதிபர் கூறியுள்ளார்.  இதுகுறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்துவிட்டு குறித்த பெண் ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.
இதன்போது ஹோட்டல் அறைக்குள் இருந்த அதிபர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.  இத தொடர்பாக தொடரப்பட்டிருந்த வழக்கு விசாரனயின் பொதே  அவர்ட தனது குற்றத்தை ஒப்புக்கொண்டள்ளார்.