செய்திகள்

‘பீகொக்’ மாளிகையில் நாளை முதல் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜயவர்தனபுரக் கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஏ.எஸ்.பி.லியனகேவின் ‘பீகொக்’ மாளிகையில் நாளை முதல் குடியமரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் நாளைய தினம் அங்கு குடிபுகுவதற்கான ஆயத்தங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. ஏற்கனவே ஜோதிடக் காரர்களின் யோசனைப்படி குறித்த மாளிகையில் கதவுகள் அமைந்துள்ள பகுதிகள் மாற்றியமைக்கப்பட்டிருந்ததுடன் அங்கிருந்த நீச்சல் தடாகமும் ஜோதிடர்களின் யோசனைப்படி மூடபட்டுள்ளது.  இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ நாளைய தினம் சுப நேரத்தில் அந்த வீட்;டுக்கு குடிபுகவுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வரும் முயற்சிகள் இடம்பெற்று வரும் நிலையில் அவருக்கு தொடர்ந்தும் கொழும்பில் தங்கியிருக்கக்கூடிய வகையில் பல கோடி ரூபா பெறுமதியான குறித்த மாளிகையை அவருக்கு வழங்குவதற்கு தொழிற் கட்சியின் தலைவரான ஏ.எஸ்.பி.லியனகே தீர்மானித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.
03
02