செய்திகள்

புகழ்பெற்ற சென்னை சாந்தி தியேட்டர் இடிக்கப்படவிருக்கிறது

புகழ்பெற்ற சென்னை சாந்தி தியேட்டர் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் 4 நவீன திரையரங்குகளுடன் கூடிய வணிக வளாகம் ஒன்றை அக்‌ஷயா ஹோம் நிறுவனம் கட்டவிருக்கிறது. இந்த செய்தியை உறுதிசெய்யும் வகையில் இந்த தியேட்டர் விற்பனை செய்யப்படுவதாக நடிகர் பிரபு இன்று அறிவித்துள்ளார்.

54 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அண்ணாசாலையில் ஜி.உமாபதியால் கட்டப்பட்டது சாந்தி தியேட்டர். சிவாஜிகணேசன் நடித்த ‘ராஜராஜ சோழன்’ படத்தை தயாரித்த உமாபதிக்கு சொந்தமாக சென்னை அண்ணாசாலையில் ஆனந்த் என்ற திரையரங்கமும் இருந்தது. 1962ஆம் ஆண்டு சாந்தி திரையரங்கத்தை ஜி.உமாபதியிடம் இருந்து நடிகர் சிவாஜிகணேசன் வாங்கினார்.

அன்று முதல் சிவாஜிகணேசன் நடித்த படங்கள் அனைத்தும் சாந்தி திரையரங்கத்திலேயே திரையிடப்பட்டன. 2005 ஆம் ஆண்டு சாந்தி திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டு, சாந்தி, சாய்சாந்தி என இண்டு திரையரங்கமாக மாற்றப்பட்டது. அங்கு சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்து, ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ படம் 800 நாட்களை தாண்டி ஓடி சாதனை படைத்தது.