செய்திகள்

புகைத்தல் எதிர்ப்பு தினம் – ஹட்டனில் பேரணி

புகைத்தல் எதிர்ப்பு தினம் 03.06.2015 அன்று நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் அட்டன் பொலிஸாரின் ஏற்பாட்டில் அட்டன் பகுதியில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களால் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி 03.06.2015 அன்று காலை இடம்பெற்றது.

இப் பேரணி அட்டன் பொலிஸ் நிலையத்தில் ஆரம்பித்து அட்டன் பஸ் நிலையம் வரை சென்று மீண்டும் பொலிஸ் நிலையத்தை வந்தடைந்தது.

சிகரட் புகையிலிருந்து சுதந்திரமான சூழலில் வாழ்வதற்கு சின்னசிறு எமக்கு இடமளியுங்கள், புகை பிடிப்பது உங்களை மரணத்திற்கு வேகமாக அழைத்து செல்லும், புகைப்பிடித்தால் நீங்கள் பலவீனவர்களாக மாறுவீர்கள், நீங்கள் சிகரட் பிடிப்பதை இன்றே நிறுத்துங்கள் போன்ற வாசகங்களை ஏந்தி பாடசாலை மாணவர்களும் பிரதேச மக்களும் பேரணியில் ஈடுப்பட்டனர்.

இதன்போது அட்டன் பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் சர்வமத தலைவர்களும் கலந்து கொண்டனர்.