செய்திகள்

வன்னியில் நீர்க்காகம் கெளிறு மீனை கொத்தும் இயற்கைக் காட்சி

வவுனியா, குடியிருப்பு குளத்தில் கெளிறு மீன் ஒன்றை நீர்க்காகம் கொத்திச்சென்றது.

கெளிறு மீன்கள் நீர்நிலைகளின் அடியிலுள்ள சேற்றுப்பகுதிகளுக்குள் பொந்துகள் அமைத்து வாழும். நீர்க்காகங்கள் தமது இலகுவான மீன் வேட்டைக்காக இந்த கெளிறு மீன்களையே குறி வைக்கும்.

குடியிருப்பு குளக்கட்டில் அமர்ந்திருந்த போது இந்த நீர்க்காகம் நீருக்குள் புகுவதை கண்டு அதன் வெளிவருகைக்காக நீர்ப்பரப்பை அவதானித்திருந்தேன்.

ஊகித்தது போலவே அந்த நீர்க்காகம் ஒரு கெளிறு மீனை வாயில் கொத்தி வந்தது. மீனின் நல்லகாலம் தான் அது. நீர்க்காகம் கவ்வியது மீனின் மீசைப்பகுதியை தான்.

கவ்வியபடி பறக்கும் போது இடை நடுவிலேயே மீன் நீருக்குள் விழுந்து தப்பித்துவிட்டது

N5