செய்திகள்

புகைப்பழக்கத்தை விட்டுவிடுவேன்: ரசிகர்களிடம் மனம் திறந்த சிம்பு

நடிகர் சிம்பு சமீபத்தில் ட்விட்டர் மூலமாக தன் ரசிகர்களிடம் உரையாடினார். அவர்களுடைய பல கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அதன் தொகுப்பு:

சூப்பர் ஸ்டார் படத்தில் எதை ரீமேக் செய்ய விருப்பம்?

மன்னன் அல்லது அண்ணாமலை

அஜீத்துடன் நடிப்பது அல்லது அவரை இயக்குவது குறித்து?

இரண்டையும் செய்ய ஆசைப்படுகிறேன்.

பிடித்த அந்தக் கால நடிகை?

சரோஜா தேவி

மின்னலே படத்தை எத்தனை முறை பார்த்தீர்கள்?

மின்னலை, அலைபாயுதே ஆகிய இரு படங்களையும் 25 தடவைக்கும் மேல் பார்த்துள்ளேன்.

உங்கள் ரசிகர்கள், குடும்பத்தினர் யார் உங்களுடைய பலம்?

என் கடினமான தருணங்களில் இருவரும் என்னுடன் இருப்பவர்கள்.

அலியா பட் அல்லது சோனம் கபூர், யார் பிடிக்கும்?

அலியா பட்.

கடினமான சமயங்களில் உங்களை ஊக்கப்படுத்துவது யார்?

என் சகோதரனும் சகோதரியும்

இப்போதெல்லாம் நீங்கள் மிகவும் பக்குவமானவர் போல இருக்கிறீர்களே? எப்படி எனத் தெரிந்து கொள்ளலாமா?

வாழ்க்கையைப் பற்றி புரிந்துகொண்டால் நீங்களும் அப்படித்தான் இருப்பீர்கள்.

உங்களைப் பற்றித் தவறாகப் பேசுபவர்கள் பற்றி?

நேரம் நன்றாக இருந்தால் மாற்றிப் பேசுவார்கள்.

மன்மதன், தொட்டி ஜெயா, விண்ணைத் தாண்டி வருவாயா படங்கள் உங்கள் நடிப்பை நிரூபிக்க உகந்ததாக இருந்தன. அதுபோல நீங்கள் ஏன் ஃபர்பி படம் பண்ணக்கூடாது?

எதையும் நிரூபிப்பதற்காக நான் எந்தப் படமும் பண்ணுவதில்லை.

உங்கள் பலம் – பலவீனம் என்ன?

பலம் – நேர்மை; பலவீனம் – உண்மை.

நீங்கள் புகைபிடிப்பீர்களா?

25 வயதில் ஆரம்பித்தேன். விட்டுவிடவேண்டும் என்று நினைக்கிறேன்.

சிம்பு – தனுஷ் நட்பின் சிறப்பு என்ன?

இருவரும் ஒருவர் மீது வைத்துள்ள மரியாதை.

பிடித்த இளம் இயக்குநர்கள்?

நலன், கார்த்திக் சுப்புராஜ், நவீன் மற்றும் இன்னும் சிலர்.

விஜய் உங்களுக்குப் பிடிக்காதா?

ஒருவரைப் பிடிக்கும் என்பதற்காக மற்றவரைப் பிடிக்காது என்று அர்த்தமில்லை. அவர் எனக்கு அண்ணன் போல மற்றும் நல்ல நண்பர்.

உலகில் அன்பைப் பரப்பவேண்டும் என்று சொல்கிறீர்கள்? அன்பைப் பரப்புவதால் மட்டும்தான் போர்களை நிறுத்தமுடியுமா?

உங்களிடம் வேறு யோசனை உள்ளதா?

இந்த வருடம் உங்களிடமிருந்து எத்தனை படங்களை எதிர்பார்க்கலாம்?

குறைந்தபட்சம் மூன்று. இன்னும் அதிகமாகலாம்.

உங்களுடைய திருமணம் எப்போது?

ஆண்டவன் தான் முடிவெடுக்கவேண்டும்.

சிம்பு – அனிருத் கூட்டணி எங்களுக்கு வேண்டும். எப்போது?

வெகு விரைவில்.

அஜீத்துடன் எப்போது படம் பண்ணுவீர்கள்?

அவர் எப்போது அழைத்தாலும்

வாலு நிச்சயம் ஜூன் 26-ம் தேதி வெளிவருமா?

ஜூன் 26 அல்லது ஜூலை 3. இந்தமுறை தவறு எதுவும் நேராமல் பார்த்துக் கொள்கிறேன்.