செய்திகள்

புகையிரதம் தடம் புரண்டதால் மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

நாவலப்பிட்டியிலிருந்து நானூஓயா வரை சென்ற எரிபொருள் மற்றும் பயணிகளை ஏற்றிச்சென்ற ரயில் தடம் புரண்டுள்ளது.

அதனால் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்தள்ளனா்.

வட்டவளை மற்றும் ரொசல்ல ஆகிய புகையிரத நிலையத்திற்கு இடையில் 102 1/4 கட்டைப்பகுதியில் இன்று மாலை 4.10 மணியளவில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரயில் பாதையை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது.

DSC07814

DSC07813

DSC07812

DSC07806