செய்திகள்

புகையிரத பாதையில் மரம் முறிந்து விழுந்ததன் காரணமாக ரயில் சேவை பாதிப்பு

கடும் மழை காரணமாக அட்டன் புகையிரத நிலையத்திற்கு அண்மையிலுள்ள சிங்கமலை சுரங்க பகுதியில் புகையிரத பாதையில் 176ம் கட்டைப்பகுதியில் பாரிய மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்ததன் காரணமாக சிறிது நேரம் புகையிரத சேவை தடைப்பட்டிருந்தது.

எனினும் தற்போது மரத்தை வெட்டி அகற்றியுள்ளதாகவும் புகையிரத சேவை வழமைக்கு மாறியுள்ளதாகவும் அட்டன் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 Train (2) Train (6) Train (8)