செய்திகள்

புங்குடுதீவு படுகொலை: 10 ஆவது நபரும் கைது

புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் நயினாதீவைச் சேர்ந்த நபர் ஒருவரை திங்கட்கிழமை குற்றப்புலனாய்வு பிரிவுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாயினாதீவைச் சேர்ந்த 24 வயதுடைய நபரே குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு ள்ளார். கைது செய்யப்பட்ட நபரை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின் குமார் முன்னிலையில் முற்படுத்தி பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க பொலிஸார் அனுமதி பெற்றுள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் காவலில் வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் ஏற்கனவே ஒன்பது நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் எதிர்வரும் 15ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையிலேயே திங்கட்கிழமை பத்தாவது சந்தேக நபராக மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.