செய்திகள்

புங்குடுதீவு மாணவியின் மரணம் தொடர்பில் விசாரணைகள் துரிதப்படுத்தப்படல் வேண்டும் : டக்ளஸ்

புங்குடுதீவில் உயிரிழந்த மாணவியின் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இழப்பால் துயருற்றிருக்கும் உறவுகளுக்கு ஆறுதலை தெரிவித்துள்ளார்.

மாணவியின் இல்லத்திற்கு நேற்றைய தினம் (14) விஜயம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கும் உறவுகளுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார்.

புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் கல்விப் பொதுத்தர உயர்தரத்தில் கல்வி கற்கும் செல்வி சிவலோகநாதன் வித்தியா பாழடைந்த வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இதனிடையே குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகளை இனம் காணுமாறு பொலிசாரிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.