செய்திகள்

புட்டினுக்கு எதிராக ரஸ்சியாவில் பாரிய பேரணி

சுட்டுக்கொல்லப்பட்ட ரஸ்சியாவின் முன்னாள் பிரதிபிரதமர் பொறிஸ் நெம்சோவினை நினைவுகூர்ந்தபடி ஆயிரக்கணக்கான ரஸ்சியர்கள் ஞாயிற்றுக்கிழை மாபெரும் பேரணியொன்றை நடத்தியுள்ளனர். நாங்கள் அச்சப்படவில்லை, புட்டின் இல்லாத ரஸ்சியா போன்ற கோசங்களை எழுப்பியவண்ணம்இவர்கள் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.Part-DV-DV1979651-1-1-0

குறிப்பிட்ட படுகொலை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள சீற்றத்தையும், புட்டின் ஆட்சி மீது காணப்படும் வெறுப்புணர்வையும் பிரதிபலிக்கும் விதத்தில் இந்த பேரணி அமைந்துள்ளதுபொலிஸார் 16000 பேர் இந்த பேரணியில் கலந்துகொண்டதாக தெரிவித்துள்ள அதேவேளை பேரணியை ஏற்பாடு செய்தவர்கள் 50000 ற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டதாக தெரிவித்துள்ளனர்கடும் மழைக்கு மத்தியிலும் இவர்கள் பேரணயில்கலந்துகொண்டுள்ளனர்.கிரம்ளினிற்கு மிக அருகில் வந்த இந்த பேரணி,நெம்சொவ் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தையும் கடந்து சென்றுள்ளது,உக்ரைனில் ரஸ்சிய சார்பு ஜனாதிபதியை வெளியேற்றுவதற்காக நடைபெற்ற புரட்சியின் பயன்படுத்தப்பட்ட கோசங்களையும், பதாகைகளையும் மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.

கே.ஜிபி அதிகாரி ஓருவர் தன்னை வாழ்நாள் ஜனாதிபதியாக அறிவித்தால் அது புவிசார் அரசியல் பேரழிவு, புட்டினே இராஜினாமா செய் என்ற பதாகையும் காணப்பட்டுள்ளது.
இதேவேளை தங்கள் மத்தியில் தியாகி ஓருவரை உருவாக்கவும் தங்கள் மத்தியில் காணப்படும் பிரிவினையிலிருந்து விடுபட்டு ஐக்கிய த்தை உருவாக்கவும் எதிர்கட்சியினரே இந்த கொலையை செய்திருக்கலாம் என ரஸ்சிய சார்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Part-REF-TS-DV1979613-1-1-0

அதேவேளை நெம்சொவ்வின் ஆதரவாளர்கள் புட்டின் நிர்வாகத்தையே குற்றம்சாட்டியுள்ளனர்.எதிர்கட்சியினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வெறுப்புணாவு நடவடிக்கைகளை நிறுத்தினால் மாத்திரமே ரஸ்சியாவை மாற்றமுடியும்,அது நடைபெறாவிடில் பாரிய உள்நாட்டு மோதல் வெடிக்கலாம் என எதிர்கட்சியினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.அதிகாரிகள் ஊழல் நிறைந்தவர்கள் . அவர்கள் தங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை சகித்துக்கொள்வதில்லை, அவர்கள் பொறிஸ் குறித்து அச்சம் கொண்டிருந்தனர் என்றும் எதிர்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த படுகொலை ரஸ்சியாவில் குறிப்பிடத்தக்களவு கருத்து மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுஇவ்வாறிருக்க ரஸ்சியா ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இந்த படுகொலைகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.