செய்திகள்

புட்டினுக்கு கமரூன் கடும் எச்சரிக்கை

உக்ரைன் நெருக்கடியில் ரஷ்சியாவின் தலையீட்டை ஐரோப்பா அலட்சியம் செய்யமுடியாது என எச்சரித்துள்ள பிரிட்டிஸ் பிரதமர் டேவிட் கமரூன் விளாடிமிர் புட்டின் பொருளதார தடைகளை எதிர்கொள்ளலாம், அந்த தடைகளால் ரஸ்சியா பல வருட பாதிப்பினை எதிர்கொள்ளலாம் என எச்சரித்துள்ளார்.
உக்ரைனில் ஒரு நாட்டின் இறமைiயை, பிரதேச ஒருமைப்பாட்டை இன்னொரு நாடு பாதிப்பிற்குள்ளாக்குகின்றது,
கிழக்கு உக்ரைனில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் ரஷ்ய ஆர்.பிஜிக்களையும், டாங்கிகளையும், ஆர்ட்டிலறிகளையும் பயன்படுத்துகின்றனர். இவற்றை ஈபே போன்ற வெப்தளங்களில் பணம் கொடுத்து வாங்கமுடியாது, இவை ரஷ்சியாவிலிருந்தே வருகின்றன,இதனை தடுத்து ரஸ்சியா நிறுத்தாவிட்டால் அவர்கள் பல வருடங்களுக்கு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிhகொள்ளவேண்டும் என்பது குறித்து நாங்கள் உறுதியாக இருக்கவேண்டும்.
ரஸ்சியாவின் நடவடிக்கைகள் முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ள முடியாதவை, அதன்விளைவுகளை அவர்கள் அனுபவிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை பிரிட்டன் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.