செய்திகள்

புட்டினை விமர்சிப்பவர்களுக்கான எச்சரிக்கை

மொஸ்கோவில் இன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ள பொறிஸ்நெம்சொவ் ரஸ்சிய அரசியலில் மக்களை கவரக்கூடிய நபராக காணப்பட்டவர். தாராளவாத சீர்திருத்தவாதியான இவர் பொறிஸ்யெல்சினின் காலத்தில் முன்னணிக்கு வந்தவர். விளாடிமிர் புட்டினை கடுமையாக விமர்சித்தவர்.  ஓரு அணுவிஞ்ஞானி,சூழலியாளர்,நான்கு பிள்ளைகளின் தந்தை. 2003 இல் பாராளுமன்றத்திலிருந்து வெளியேறிய பின்னர் பல எதிர்ப்பு இயக்கங்களை உருவாக்கியவர்.ரஸ்சியாவின் குடியரசு கட்சி மற்றும்,மக்கள் சுதந்திரக் கட்சி ஆகியவற்றில் முக்கிய உறுப்பினராக விளங்கியவர்.

_81304147_gettyimages_103782515

 

ரஸ்சிய ஜனாதிபதியை தீவிரமாக விமர்சித்து வந்த பொறிஸ்நெம்சொவ், உக்ரைன் நெருக்கடிக்கும், ரஸ்சிய பொருளாதார நெருக்கடிக்கும், 2014 சோச்சி ஓலிம்பிக்சில் நடைபெற்ற ஊழல்களுக்கும் புட்டினே காரணம் என பகிரங்கமான தெரிவித்துவந்தார்.  2011 இல் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய தேர்தலை தொடர்ந்து ரஸ்சிய தலைநகரில் இடம்பெற்ற பல ஆர்ப்பாட்ங்களை அலெக்செய் நவல்னி,கரி கஸ்பரோவ் ஆகியோருடன் இணநை;து ஏற்பாடு செய்தவர் இவர்.அவ்வேளை ஆர்பாட்டங்களில் ஈடுபட்டதற்காக அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு பல நாட்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

ஜனாதிபதியாவர் என கருதப்பட்டவர்
1990 இல் ரஸ்சிய பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட பொறிஸ்நெம்சொவ் 1991 இல் பொறிஸ்யெல்சினின் தலைமைத்துவம் கடுமையான தாக்குதலுக்குள்ளான வேளை அவருக்கு ஆதரவாகநின்றவர். அதற்கு நன்றிக்கடனாக யெல்சின் அவரை பின்னர் பிராந்தியம் ஓன்றின் ஆளுநராக நியமித்தார். அதன் பின்னர் அவர் ரஸ்சியாவின் முன்னணி அரசியல்வாதியாக மாறியவேளை யெல்சின் அவரை அடுத்த ஜனாதிபதியாக்க விரும்புகின்றார் என்றும் எதிர்வு கூறல்கள் வெளியாகியிருந்தன. மொஸ்கோவில் நாளை புட்டின் எதிர்ப்பு பேரணியொன்று இடம்பெறவிருந்த வேளையிலேயே இந்த படுகொலை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.இது புட்டினை விமர்சிப்பவர்களுக்கான ஓரு எச்சரிக்கையாகவே காணப்படுகின்றது.

boris-nemtsov
புட்டினின் வெறுப்புணர்வும், வன்முறையும் நிலவும் ஆட்சியில் இவ்வாறு இரத்தம் சிந்தப்படுவது தவிர்க்க முடியாதது என தெரிவித்துள்ள கரிகஸ்பரோவ், புட்டினை எதிர்த்தால்உங்கள் உயிருக்கு பெறுமதி இல்லாமல் போய்விடும் என்பதே இந்த கொலை மூலம் தெரிவிக்கப்பட்ட செய்தி என்றும் குறிப்பிட்டுள்ளார்.