செய்திகள்

புதிய அரசாங்கத்தினால் வடக்கு, கிழக்கு மீள்குடியேற்றத்துக்கு ரூ.160 மில்லியன் ஒதுக்கீடு

புதிய அரசாங்கத்தினால் வடக்கு, கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த குடும்பங்கள், அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்காக 160 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துசமய விவகார அமைச்சு தெரிவித்தது.

ஒரு குடும்பத்துக்கு 38 ஆயிரம் ரூபாய் வீதம் 2,175 குடும்பங்களுக்கு இந்த தொகையை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.