செய்திகள்

புதிய அரசாங்கத்தில் நிலையான அரசியல் தீர்வு: அமைச்சர் மங்கள சொல்கின்றார்

புதிய பாராளுமன்றத்தாலும், புதிய அரசாங்கத்தாலும் சகல தரப்பினரின் குறைகளையும் நிவர்த்திசெய்யக் கூடிய நிலைத்திருக்கக் கூடிய அரசியல் தீர்வொன்றை முன்வைக்க முடியும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமையின் மூலம் நிலைத்திருக்கக் கூடிய தீர்வொன்றை ஏற்படுத்த முடியாது. இதற்காக கடந்த காலங்களில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்க வில்லை.

இந்த நிலையில், நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு புதிய வரையறைகளை உருவாக்குவதற்கும் புதிய பாராளுமன்றத் தின் ஊடாக சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் வெளிவிவகார அமைச் சர் நிக்கேய் ஏசியன் ரிவ்யூ என்ற ஊடகத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இவ்வாறு குறிப் பிட்டுள்ளார்.

எதிர்வரும் சில வாரங்களில் பாராளு மன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர் தல் நடத்தப்படும் என நம்புவதாகக் குறிப்பிட்டி ருக்கும் அவர், சர்வதேச தொழில்நுட்ப உதவியுடன் இலங்கைக்கே தனித்துவமான விசாரணைப் பொறிமுறை யொன்று உருவாக்கப்படும் என்றும் கூறினார்.

இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் குறிப்பிட்ட அவர், எந்தவொரு அண்டை நாட்டுக்காகவும் அன்றி, சொந்த நலனை அடிப்படையாகக் கொண்டே இலங்கை அரசாங்கம் ‘சமதிசை’ வெளிவிவகாரக் கொள்கையை கடைப்பிடிக்கிறது. சீனாவுடன் இலங்கை நீண்டகாலமாக நல்லுறவைப் பேணி வருகிறது. தொடர்ந்தும் இருநாட்டுக்கு மிடையில் நல்லுறவு காணப்படுகிறது.

அதேநேரம், இந்தியாவுடனான நட்புறவு மிகவும் முக்கியமானது. இந்த நட் புறவானது இந்திய ஆதரவாக இல்லாமல் இலங்கை ஆதரவான நட்புறவாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.