செய்திகள்

புதிய அரசாங்கம் எமது கழுத்தை நெரிக்கிறது: செய்தியாளர்களிடம் நாமல்

 புதிய அரசாங்கம் எம்மை அழுத்தத்துக்கு உள்ளாக்குகின்றது என்றும் கழுத்தை நெரிக்கிறது என்றும் மஹிந்த ராஜபக்ஸவின் மகன் நாமல் தெரிவித்துள்ளார்.

இன்று தங்காலை கால்டன் வீட்டில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் , அழுத்தங்கள் மத்தியிலும் தாங்கள் மக்கள் சேவையை தொடர்ந்து செய்து வருவதாக கூறியுள்ளார்.

” நாம் மக்களுக்கு அன்று செய்த சேவையை இன்றும் தொடர்கிறோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இன்றும் மறக்காத மக்கள் தங்காலையில் உள்ள கால்டன் வீட்டில் வந்து அன்றாடம் சந்திக்கின்றனர்” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த ஊடகவியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.