செய்திகள்

புதிய அரசில் இணையும் டக்ளஸின் கோரிக்கை நிராகரிப்பு

யாழ் ஸ்ரீதர் திரை அரங்கிலிருந்து வெளியேறிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கொழும்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து புதிய அரசாங்கத்தில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்தபோதிலும் ரணில் விக்கிரமசிங்கசிங்க அதனை நிராகரித்து விட்டதாக அறிய முடிகிறது. இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் அவர் சந்தித்து இதே கோரிக்கையை விடுத்ததாகவும் ஆனால் அவரும் அதனை மறுத்துவிட்டதாக தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

பொதுமக்கள் ஐக்கிய முன்னணியின் பல அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் இன்று அம்பாந்தோட்டைக்கு சென்று மஹிந்த ராஜபக்சவை சந்தித்தபோதிலும் டக்ளஸ் தேவானந்தா அவரை சந்திக்கவில்லை என்றும் இது அவர் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளதையே காட்டுவதாக தமிழ் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

டக்ளஸ் தேவானந்தா ஸ்ரீதர் திரை அரங்கிலிருந்து வெளியேறியமையை அடுத்து அங்கு மக்கள் பட்டாசு கொளுத்தி ஆரவாரம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.