செய்திகள்

புதிய ஆட்சி ஐ.நா வுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்து

புதிய ஜனாதிபதி மனித உரிமை பாதுகாவலர்களுக்கு ஆதரவளிப்பதுடன் ஐ. நா வுடன் ஒத்துழைத்து செயற்ப்பட வேண்டும் என்று மனித உரிமைகளுக்கான சர்வதேச சேவை தெரிவித்திருக்கிறது.

புதிய அரசாங்கத்தின் தெரிவானது ராஜபக்சவின் அடக்குமுறை ஆட்சியை மட்டுமன்றி, இலங்கையில் சகலவிதமான மனித உரிமை மீறல்களுக்குமெ திராகவும் கடந்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புகூறும் தன்மையை வலியுறுத்தியும் வந்த மனித உரிமை ஆர்வலர்களுக்குமெதிரான தாக்குதல்களையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று இந்த அமைப்பின் பணிப்பபாளர் பில் லின்ச் தெரிவித்தார்.