செய்திகள்

புதிய கட்சியை ஆரம்பிக்க பொதுபல சேனா தீர்மானம்

புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதளை தெரிவித்துள்ளார்.
தூய்மையான சிங்கள் பௌத்த அமைப்பென்ற வகையில் புதிய கட்சியை ஆரம்பிக்கப்போவதாகவும் இதில் எந்தவொரு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களையும் இணைத்துக்கொள்ளப் போவதில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளர்.
இதேவளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது கட்சி போட்டியிடக் கூடுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.