செய்திகள்

புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கப் போவதாக சோமவன்ச அறிவித்துள்ளார்

புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கப் போவதாக ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சியில் தன்னைப்போல் மேலும் சிலர் அதிருப்தியினை கொண்டிருந்ததாகவும் அவர்களை இணைத்துக்கொண்டு குறித்த புதிய கட்சியை ஆரமபிக்கவுள்ளதாகவும் இது தொடர்பான தகவல்களை மாநாடொன்றை நடத்தி அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஜே.வி.பியிலிருந்து விலகுவதாக ஊடகவியலாளர்கள் மத்தில் அறிவித்த போதே புதிய கட்சியை ஆரம்பிப்பது தொடர்பாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி தற்போதய நாட்டு நிலைமைக்கு ஏற்றால் போல் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டுமெனவும் கட்சியின் சில கொள்கைகள் மக்களுக்கு பிடிக்கவில்லையெனவும் ஆனால் தொடர்ந்தும் அந்த கொள்கைகளை கட்சி கடைபிடிப்பதால் தான் அதிலிருந்து விலக தீர்மானித்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1963இல் ஜே.வி.பியில் இணைந்த சோமவன்ச 1990ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை அந்த கட்சியின் தலைவராக செயற்பட்டதுடன் பின்னர் சர்ததேச விவகாரங்களுக்கு பொறுப்பானவராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.