செய்திகள்

புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா விருப்பம்

புதிதாக தெரிவாகியுள்ள இலங்கை ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற ஆர்வம் கொண்டிருப்பதாக அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜோன் கெரி தெரிவித்திருக்கிறார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தோல்வியை ஏற்றுக் கொண்டமை குறித்தும் அவர் தனது மகிழ்ச்சியை வெளியிட்டிருக்கிறார்.

ராஜபக்ஸ தனது தோல்வியை ஏற்றுக்கொண்ட செய்தி வெளியான பின்னர் அறிக்கை ஒன்றை விடுத்த ஜோன் கெரி , அனைவரையும் உள்ளடக்கும் வகையில் சமாதானமும் ஜனநாயகமும் செழிப்பும் நிறைந்த இலங்கையை  கட்டி எழுப்புதல் என்ற மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா அவருடன் இணைந்து பணியாற்ற ஆர்வம் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதேவளை, தனது தோல்வியை ஏற்று அமைதியான முறையில் அதிகாரத்தை மாற்றம் செய்யும் ஜனாதிபதி ராஜபக்ஸவை பெயர்த்தும் பாராட்டுவதாகவும் மக்கள் அளித்த தீர்ப்பினை ஏற்றுக்கொள்வதாக அவர் கூறிய வார்த்தைகள் முக்கியமானவை என்றும் வர தெரிவித்தார்.