செய்திகள்

புதிய தேர்தல் சீர்திருத்தம்: எம்.பி.க்களின் எண்ணிக்கை 250 ஆக அதிகரிக்கும்

புதிய தேர்தல் சீர்திருத்தங்களுக்கமைய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 250 ஆக அதிகரிக்கப்படும் என தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடைபெறவுள்ள மாநாட்டின் போது தோதல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெளிவுபடுத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

புதிய தேர்தல் நடைமுறைகளின்படி தேர்தல் தொகுதி அடிப்படையில் 140 ஆசனங்களும், மாவட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின்படி 80 ஆசனங்களும், தேசியப் பட்டியல் மூலமாக 30 ஆசனங்களும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.