செய்திகள்

புதிய தேர்தல் முறையில் யாழ்ப்­பா­ணத்தின் 11 தொகு­திகள் 6 ஆக குறை­வ­டையும் அபாயம்

அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு அமைச்­ச­ர­வையின் அனு­மதி கிடைத்­தமை மகிழ்ச்சி அளிக்­கின்ற போதும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தொகையை அதி­க­ரிக்­காது உள்­ளமை சிறு­கட்­சி­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என நீதி­யா­னதும் சுதந்­தி­ர­மா­ன­து­மான தேர்­த­லுக்­கான மக்கள் இயக்கம் (கபே) தெரி­வித்­துள்­ளது.

புதிய தேர்தல் முறை­மை யின் ஊடாக யாழ்ப்­பா­ணத்தில் உள்ள 11 தொகு­தி­களை 5 அல்­லது 6ஆக குறைக்க நேரிடும். நாட்டில் உள்ள தொகு­தி­களை 10 அல்­லது 15 வரை குறைத்தால் பிரச்­சினை இல்லை ஆனால் ஒரே நேரத்தில் 35 தொகு­தி­களை குறைப்­பது ஏற்றுக் கொள்­ளக்­கூ­டிய நிலை அல்ல என்றும் அந்த இயக்கம் குறிப்­பிட்­டுள்­ளது.

சிறு­கட்­சி­க­ளுக்கு நியாயம் கிடைக்க வேண்­டு­மாயின் கட்­டாயம் பாரா­ளு­மன்றில் உறுப்­பி­னர்கள் எண்­ணிக்கை உயர்த்­தப்­பட வேண்டும் என கபே இயக்கம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. இது தொடர்பில் கபே இயக்­கத்தின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கீர்த்தி தென்­னகோன் விடுத்­துள்ள அறிக்­கையில்,

அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு அமைச்­ச­ரவை அனு­மதி கிடைத்­ததை வர­வேற்­கிறோம். ஆனால் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எண்­ணிக்கை 225ஆக வைத்­துள்­ளமை மற்றும் தொகு­தி­களை 125ஆக குறைத்­துள்­ளமை சிறு­கட்­சிகள் மற்றும் சிறு­பான்மை கட்­சி­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும். முஸ்லிம் கட்­சிகள், இந்­திய வம்­சா­வளி மலை­யக கட்­சிகள், மக்கள் விடு­தலை முன்­னணி மற்றும் ஹெல உறு­மய போன்ற கட்­சி­க­ளுக்கு இது பாரிய பாதிப்பை ஏற்­ப­டுத்தும்.

தொகு­தி­வாரி மற்றும் விகி­தா­சார முறையில் கலப்பு தேர்தல் முறைமை ஒன்றை அறி­முகம் செய்ய அமைச்­ச­ரவை அனு­மதி கிடைத்­தமை இலங்கை அர­சியல் கலா­சா­ரத்தில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தும் முதல் படி­யாகும். ஆனால் நாட்டின் அனைத்து மக்­க­ளுக்கும் பிர­தி­நி­தித்­து­வத்தில் நியாயம் வழங்க 225 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் என்ற போது­மா­ன­தல்ல. தேர்தல் திருத்­தத்­திற்கு முத­லா­வ­தாக கொண்­டு­வ­ரப்­பட்ட யோச­னையில் கூட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையை 234, 235 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்­காமல் சிறு கட்­சிகள், சிறு­பான்மை கட்­சிகள் மற்றும் பெண்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை அதி­க­ரிக்க முடி­யாது. ஐக்­கிய தேசியக் கட்சி சார்பில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க முன்­வைத்­துள்ள 125 தொகு­திகள் அடங்­கிய 225 உறுப்­பி­னர்­களைக் கொண்ட தேர்தல் முறையில் பிர­தான மூன்று பிரச்­சி­னைகள் உள்­ளன.

முத­லா­வ­தாக தற்­போ­துள்ள தொகு­தி­களை 125 தொகு­தி­க­ளாக மட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு கூடிய காலம் எடுக்கும். இரண்­டா­வ­தாக சிறு­பான்மை கட்­சி­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை உறுதி செய்­ய­வென போதி­ய­ளவு பல் அங்­கத்­தவர் தொகுதி இல்­லாத நிலை உள்­ளது.

மூன்­றா­வ­தாக வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் சிங்­கள பிர­தி­நி­தித்­துவம் (வவு­னியா, சேரு­வில, அம்­பாறை) மற்றும் தமிழ், முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தை அனைத்து தொகு­தி­க­ளிலும் உறுதி செய்து கொள்ள முடி­யாத நிலை காணப்­ப­டு­கின்­றது.

தேர்தல் நிரு­வா­கத்தின் படி 1970களில் அறி­முகம் செய்­யப்­பட்ட 160 தொகு­தி­களில் 168 உறுப்­பி­னர்கள் தெரிவு செய்யும் முறை தற்­போதும் இருந்து வரு­கி­றது. கால­னித்­து­வத்தில் இருந்து செய்­யப்­பட்ட ஒவ்­வொரு எல்லை நிர்­ண­யத்தின் போதும் இலங்­கையில் தொகு­தி­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் அமைச்­ச­ர­வையில் சமர்­பிக்­கப்­பட்ட யோச­னையின் மூலம் 160 தொகு­தி­களை 115-118 ஆக குறைக்க வேண்டும். (குறைந்­தது 9 பல் அங்­கத்­தவர் தொகு­தி­யேனும் இருக்க வேண்டும்)

சரி­யாகச் சொல்­வ­தாயின் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் தங்­க­ளது தொகுதி அமைப்­பா­ளர்­களை 40-45வரை குறைக்க நேரிடும். மாவட்ட அடிப்­ப­டையில் பது­ளையில் உள்ள 9 தொகு­திகள் 6 தொகு­தி­க­ளாக குறைக்­கப்­படும். காலியில் 3 தொகு­திகள், மாத்­த­றையில் இரண்டு தொகு­திகள், குரு­நா­கலில் 3 அல்­லது 4 தொகு­தி­களை குறைக்க நேரிடும். கேகாலை, இரத்­தி­ன­புரி, அநு­ரா­த­புரம் மற்றும் களுத்­துறை மாவட்­டங்­களில் 2-4 தொகு­திகள் வரை குறைக்க வேண்­டி­வரும். யாழ்ப்­பா­ணத்தில் உள்ள 11 தொகு­தி­களை 5 அல்­லது 6ஆக குறைக்க நேரிடும். நாட்டில் உள்ள தொகு­தி­களை 10 அல்­லது 15 வரை குறைத்தால் பிரச்­சினை இல்லை ஆனால் ஒரே நேரத்தில் 35 தொகு­தி­களை குறைப்­பது ஏற்றுக் கொள்­ளக்­கூ­டிய நிலை அல்ல.

அமைச்­ச­ர­வையில் அனு­மதி அளிக்­கப்­பட்ட புதிய தேர்தல் முறைமை தொடர்பில் மக்கள் நலன்­சார்ந்து செயற்பட வேண்டியது அனைத்து கட்சிகள், சிவில் அமைப்புக்கள், பிரஜைகளின் பொறுப்பாகும். இல்லையேல் புதிய தேர்தல் முறையை பாராளுமன்றில் நிறைவேற்ற முடியாது போவதோடு, பழைய ஜனநாயகமற்ற தேர்தல் முறைமையே கடைபிடிக்க வேண்டிவரும். சா/த சித்தியடையாத 94 உறுப்பினர்கள், உ/த சித்தியடையாத 142 உறுப்பினர்கள் கொண்ட 5 வீத மகளிர் அற்ற பாராளுமன்றை மீண்டும் உருவாகுவதை தடுக்க அமைச்சரவை யோசனை மாற்றியமைக்கப்பட வேண்டும்.