செய்திகள்

புதிய தேர்தல் முறை: ரணிலின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

புதிய தேர்தல் முறைமைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. புதிய தேர்தல் முறைமை குறித்த யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ளார்.

225 உறுப்பினர்களை தெரிவு செய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. 125 உறுப்பினர்கள் கலப்பு முறைமை அடிப்படையிலும், 75 உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

25 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர். பிரதமரின் யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.